ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (17:23 IST)

“சல்மானுக்கு அறிவுரை வழங்க நான் யார்?” - கடுப்பாகும் ஆமிர்கான்

சல்மானுக்கு அறிவுரை ஏதும் சொல்கிறீர்களா? என்ற கேள்விக்கு “சல்மானுக்கு அறிவுரை வழங்க நான் யார்?” என்று அமீர்கான் செய்தியாளர்களிடம் திருப்பிக் கேட்டார்.
 

 
சில தினங்களுக்கு முன்பு, சல்மான்கான் ‘சுல்தான்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து செய்தியாளர் கேட்டாபோது, படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது என்னால் நேராக நடக்க கூட முடியாது. ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் போல் என் உடம்பு ரணமாக இருக்கும்” என்று கூறியிருந்தார். 
 
அவரின் இந்த கருத்துக்கு பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்களை கேலி செய்யும் விதமாக, சல்மான்கான் கூறியிருப்பதாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டன.
 
இப்பிரச்சனை தொடர்பாக அமீர்கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், தன் உடல்வலியை, பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்ட சல்மான் கானின் கருத்து உணர்வற்றது என்றும், அது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியுள்ளார்.
 
பிறகு, சல்மானுக்கு அறிவுரை ஏதும் சொல்கிறீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு “சல்மானுக்கு அறிவுரை வழங்க நான் யார்?” என்று செய்தியாளர்களிடம் திருப்பிக் கேட்டார்.
 
சல்மான்கான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதுடன், மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையம், சல்மானை நேரில் ஆஜராகச் சொல்லி இரண்டு முறை சம்மன்களை அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.