செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (08:43 IST)

சபரிமலை சீராய்வு மனு: இன்று விசாரணை

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கேரள அரசு இந்த தீர்ப்பை ஏற்று கொள்வதாகவும், பெண்கள் சபரிமலைக்கு சென்று வழிப்ட தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து தேவஸ்தானம் சார்பில் உள்பட மொத்தம் 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நவம்பர் 13ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என அறிவித்தது

அதன்படி இந்த சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இன்றைய விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தடை வருமா? அல்லது இப்போது இருக்கும் நிலையே தொடருமா? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.