திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (22:03 IST)

பெண்களுக்கு தனியாக ஒரு ஐயப்பன் கோவில்: அஜித் பட நடிகர் அதிரடி

சபரிமலையில் பெண்கள் வழிபட என தனியாக ஒரு ஐயப்பன் கோவில் கட்ட திட்டமிட்டுள்ளதாக பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி கூறியுள்ளார். இவர் அஜித் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய ''தீனா' படத்தில் அஜித் சகோதரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் கடந்த ஐப்பசி 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்ட போது ஒரு பெண் கூட ஐயப்பன் சன்னிதியை நெருங்க கூட முடியவில்லை

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண பெண்களுக்கு என ஒரு தனி ஐயப்பன் கோவில் கட்ட திட்டமிட்டுள்ளதாக நடிகர் சுரேஷ்கோபி அறிவித்துள்ளார். சபரிமலை பகுதியில் மத்திய, மாநில அரசு இடம் கொடுத்தால் பெண்களுக்கான தனி ஐயப்பன் கோவிலை கட்ட தயார் என்றும் அந்த கோவிலில் பெண் பூசாரி மட்டுமே பூஜை செய்வார் என்றும் அறிவித்துள்ளார். சுரேஷ் கோபிக்கு மத்திய, மாநில அரசு இடம் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்