1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 நவம்பர் 2018 (08:30 IST)

உச்சக்கட்ட பரபரப்பில் சபரிமலை: 2,300 போலீசார் குவிப்பு

சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுவதால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களூம் செல்லாம் என உத்தரவு பிறக்கப்பட்டதை அடுத்து பெண் செய்தியாளர்கள், பெண்ணியவாதிகள் அங்கு செல்ல முற்பட்டனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த பெண்கள் திருப்பி அனுப்பட்டனர். 
 
அப்போது நடந்த வன்முறை தொடர்பாக போலீஸார் 4000 பேரை கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில் இன்று மாலை மீண்டும் நடை திறக்கப்படுவதால் சபரிமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். 
 
இது ஒருபுறம் இருக்க பெண்களை கோவிலுக்குள் அனுமதி அளிக்கக்கூடாது என கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்பொழுது போராட்டம் நடைபெற்று வருகிறது.