வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (17:41 IST)

ரூ.2000 வரை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி.. வேண்டாம் என முடிவு செய்த மத்திய அரசு..!

ரூபாய் இரண்டாயிரம் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்தால் 18% ஜிஎஸ்டி வரி விதிக்க இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இந்த திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்ற நிலையில் இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ரூ.2000 வரை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டபோது இந்த ஜிஎஸ்டி வரியால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதனால் இந்த திட்டம் கைவிட பரிசீலனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதேபோல் மருத்துவம், ஆய்வு காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் வரியை விலக்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகவும் ஆனால் இதற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran