வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (07:50 IST)

சத்தமே இல்லாமல் 700 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த ஸ்ட்ரீ 2!

இயக்குனர் அமர் கௌஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படம் ‘ஸ்ட்ரி 2’. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையிலும் இப்போதும் வார இறுதி நாட்களில் நல்ல வசூலை இந்த படம் பெற்று வருகிறது.

இதுவரை திரையரங்கு மூலமாக மட்டும் 750 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள இந்த படம் உருவானது சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில். இந்தியாவில் மட்டும் இந்த 515 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இது பாகுபலி மற்றும் அனிமல் ஆகிய படங்களின் வசூலை விட அதிகம்.

பேன் இந்தியா நடிகர்கள் இல்லாமல் இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறக் காரணமே திரில்லர் ஜானரில் சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த படமும், இதன் முந்தைய பாகம் பெற்றிருந்த வெற்றியும்தான் என சொல்லப்படுகிறது.