1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (22:26 IST)

ரூ.200 கள்ள நோட்டுப் புழக்கங்கள் அதிகரித்துள்ளது - ரிசர்வ் வங்கி

கடந்த 2019 – 20 ஆம் நிதியாண்டில் ரூ.200 கரன்சியில் கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 
கடந்த 2016 ஆம் ஆண்டு டிமனிஸ்டேசன் என்ற பணமதிப்பிழப்பு இரவோடு இரவாக அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் அறிமுகப்பட்டன. புதிய ரூ.200 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது 200 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும்  ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.,

குறிப்பாக 200 ரூபா கரன்சியில் 31,969 கள்ள நோட்டுகள் உள்ளதாகவும் இது 151 சதவீதம் அதிகம் எனக் கூறியுள்ளது.