புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (16:52 IST)

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஆகிய இரண்டு கடல் பகுதிகளிலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் உள்ள 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருவனந்தபுரம் பாலக்காடு ஆலப்புழா மலப்புரம் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கேரளாவில் மேற்கண்ட பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.