செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:57 IST)

மாவோயிஸ்டு தொடர்பு; தமிழகம், கேரளாவில் அதிரடி ரெய்டு!

தமிழகம் மற்றும் கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக பலரது வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.

நாட்டில் பயங்கரவாதத்தை தடுக்கும் பணியில் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பலர் செயல்பட்டு வருவதாக புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் நேற்று முதலாக தேசிய புலனாய்வு அமைப்பு தமிழகம், கேரளா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் சிவகங்கை, தேனி, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.