1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (07:44 IST)

காங்கிரஸ் பெண் செய்தி தொடர்பாளரின் மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல்

காங்கிரஸ் பெண் செய்தி தொடர்பாளர் பிரியங்கா என்பவரின் 10 வயது மகளுக்கு டிவிட்டரில் மர்ம நபர் ஒருவர் கற்பழிப்பு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த காங்கிரஸ் பெண் செய்தி தொடர்பாளர் பிரியங்கா காங்கிரஸிற்கு ஆதரவாக பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதனை பிடிக்காத கிரிஷ் கே என்ற பெயர் கொண்ட நபர் டிவிட்டரில் பிரியங்காவின் 10 வயது மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து பேசிய பிரியங்கா அந்த நபர் தனது டிவிட்டர் ப்ரொஃபைல் பிக்சராக கடவுள் ராமரை வைத்துள்ளார். எனினும் இதுபோன்ற கீழ்த்தரமான பதிவுகளை இட்டுள்ளார்.
 
இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுபவள் நானில்லை. இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். போலீஸார் அந்த நபரை விரைவில் கைது செய்வார்கள் என பிரியங்கா கூறியுள்ளார். மேலும் பிரியங்காவிற்கு ஆதரவாக பலர் டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.