கலகலக்கும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா; பிரதமர் மோடியின் திட்டங்கள் என்ன?
இன்று அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில் அவரது பயண திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி இன்று காலை 09.35 மணியளவில் டெல்லியிலிருந்து புறப்பட்டு காலை 10.35 மணிக்கு லக்னோ விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு 11.40 மணியளவில் அயோத்தியில் உள்ள பழமையான அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்.
அனுமன் கோவில் வழிபாட்டை முடித்துக் கொண்டு 12 மணியளவில் ராமர் கோவிலை அடையும் பிரதமர் மோடி 12.15 மணி அளவில் குழந்தை ராமரை வழிபடுகிறார். பிறகு அங்கு மரம் நடும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். 12.40 மணியளவில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் பூமி பூஜை முடிந்த பின் 1.10 மணிக்கு ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு பிற்பகல் 02.05 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.