ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (11:02 IST)

செல்பி எடுத்தபோது பாய்ந்த மின்னல்; கண பொழுதில் 11 பேர் பலி!

ராஜஸ்தானில் மின்னல் தாக்கியதில் ஒரே சமயத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சின்னமான அமர் மகாலுக்கு மக்கள் சுற்றுலா செல்வது வாடிக்கையாக உள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கோபுரம் மீது நேற்று பலர் ஏறி செல்பி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கிய பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமர் மகால் மட்டுமல்லாமல் ராஜஸ்தானின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மின்னல் தாக்கி உயிரிழந்த இந்த கோர விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் அசோக் கெலாட் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.