திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (08:52 IST)

மருமகன் மனைவியுடன் தகாத உறவு.. அடித்து கொல்லப்பட்ட தாய்மாமா..!

ராஜஸ்தான் மாநிலத்தில் தாய் மாமா ஒருவர் தனது மருமகனின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததை அடுத்து அவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் துங்கர்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மருமகன் பிரகாஷ். இவர் மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பிரகாஷ் வேலைக்கு சென்று இருக்கும்போது அவரது மனைவியுடன் சங்கர் தகாத உறவில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. 
 
இதனை தற்செயலாக பிரகாஷ் நேரில் பார்த்ததை அடுத்து ஆத்திரமடைந்த அவர் தடியை எடுத்து தனது தாய் மாமாவை சரமாரியாக அடித்தார். இதனால் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். இதனை அடுத்து பிரகாஷ் தலைமறைவாகிவிட்டார். 
 
இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருமகன் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த சங்கரை கொலை செய்த பிரகாஷை தற்போது போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர்.
 
Edited by Siva