புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:18 IST)

6 மாதமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்த பெண்: 31 முறை டெஸ்ட் எடுத்து பாசிட்டிவ் ரிசல்ட்

6 மாதமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்த பெண்
கொரோனா வைரஸால் கடந்த ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆறு மாதங்களாக அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வராமல் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதுவரை 31 முறை பரிசோதனை செய்தும் அனைத்திலும் பாசிட்டிவ் ரிசல்ட் தான் வந்துள்ளது  
இதில் 14 முறை விரைவு சோதனையும் 17 முறை ஆண்டிஜென் சோதனையும் செய்யப்பட்டது என்பதும் அத்தனை சோதனையிலும் அவருக்கு கொரோனா உள்ளதாகவே தெரியவந்துள்ளது மனநலம் நோய், எதிர்ப்பாற்றல் குன்றிய அந்த பெண்ணை ஆதரவற்ற இல்லத்தில் தங்கவைத்து மருத்துவர்கள் பராமரித்து வருகின்றனர் 
 
கடந்த ஆறு மாதங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் பெண் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது