புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (19:37 IST)

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் ஏற்கனவே டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது., இதனை அடுத்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவித்துள்ளார் 
 
ராஜஸ்தான் முதல்வர் அண்ணா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது