செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 11 மே 2020 (22:28 IST)

கறார் காட்டும் ரயில்வே: பயணிகள் அவசியம் செய்ய வேண்டியது என்ன??

நாளை முதல் ரயில் சேவை துவங்குவதால் ரயில்வே நிர்வாகம் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் தெரிவித்துள்ளது. 
 
நாளை முதல் பயணிகளுக்கான சிறப்பு ரயில் சேவை தொடங்குவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது என்பதும் முதல் கட்டமாக இரு மார்க்கத்தில் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்த செய்தியை இன்று காலை பார்த்தோம்.
 
இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுக்கள் கவுண்டரில் முன்பதிவு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் 15 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு தொடங்குகிறது என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளதோடு, பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு... 
 
பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் பயணிகள் ரயில் நிலையத்துக்கு வரவேண்டும். 
 
முகக் கவசம் அணிவதும், ஆரோக்கிய சேது ஆப் வைத்திருப்பதும் கட்டாயம். 
 
அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 
 
குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே ரயில்கள் நிற்கும். 
 
முன்பதிவு உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.