திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 மே 2020 (17:22 IST)

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேரம் திடீர் மாற்றம்!

நாளை முதல் பயணிகளுக்கான சிறப்பு ரயில் சேவை தொடங்குவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது என்பதும் முதல் கட்டமாக இரு மார்க்கத்தில் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்த செய்தியை இன்று காலை பார்த்தோம்.
 
இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுக்கள் கவுண்டரில் முன்பதிவு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 15 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு தொடங்குகிறது என ரயில்வே நிர்வாகம் தகவல்
 
மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நேர மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த விளக்கம் எதுவும் அறிவிக்கப்ப்டவில்லை. மேலும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவிற்கு ‘ஆரோக்கிய சேது’ செயலியை பயன்படுத்த வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போர்வைகள், கம்பளி ஆகியவை ரயிலில் வழங்கப்படாது என்றும், பயணிகளே இதனை கொண்டு வர வேண்டும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது