திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 ஏப்ரல் 2018 (15:44 IST)

நெருங்கும் தேர்தல்; அதிரடி ரைட்: சீறும் சித்தாரமையா...

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 12 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், இன்று அதிரடி ரைட் நடத்தப்பட்டுள்ளது. 
 
ஆம், அம்மாநில‌ பொதுப்பணித்துறை அமைச்சர் மகாதேவப்பாவின் வீடு உட்பட 11 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 
 
30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட நான்கு இட‌ங்களில் ஆராய்ந்தனர். அதில் கணக்கில் வராத ரூ.55 லட்சம் ரொக்கப்பணமும், ரூ.16 கோடி மதிப்பிலான ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது. 
 
இதே போல பெங்களூரு மற்றும் மைசூருவில் உள்ள 10 ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர். ஒரே நாளில் 11 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சித்தராமையா கூறியதாவது, மோடி தலைமையிலான மத்திய அரசு வருமான வரித்துறையை தவறாகப் பயன்படுத்துகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸாரின் வீடுகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. 
 
ஏன் பாஜக தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதில்லை. இது காங்கிரஸை ஒடுக்க திட்டமிடப்பட்ட‌ சதி. வரித்துறை மூல‌ம் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை தடுக்க பாஜக‌ முயற்சிப்பது அம்பலமாகியுள்ளது என பேசியுள்ளார்.