வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (12:54 IST)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது: மோடிக்கு கர்நாடக தரப்பில் கடிதம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
காவிரி பிரச்சனைக்கு முடிவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பட வேண்டும் என மத்திய அரசிற்கு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மத்திய அரசு இதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
 
இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல தரப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். ஆனால், இதற்கு எந்த ஒரு நல்ல முடிவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பிரதமர் மோடி அவர்களே, நான் உங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச விரும்புகிறேன். மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக வரைவு திட்டம் குறித்து இரு திட்டத்தை அனுப்பி வைத்திருந்தோம்.
 
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது. 
 
மேலும், இது போன்ற அமைப்பை உருவாக்குவது இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாச்சியை சீர்குலைத்துவிடும். மாநில அரசின் நீர் மேலாண்மைக்கான அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் இது அமைந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.