1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. EC denied doubleleavesymbol to admk

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் இல்லை - தேர்தல் ஆணையம் அதிரடி

Karnataka election
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

 
கர்நாடக  மாநிலத்தில் வருகிற மே 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், கோலார் தங்க வயல், ஹனூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதற்காக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. 
 
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மட்டுமே அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனவும், கர்நாடக மாநிலத்தில் அக்கட்சி அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையம் காரணம் கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நண்பர்களுடன் படுக்கையை பகிருமாறு வற்புறுத்திய கணவன் - தற்கொலை செய்த மனைவி