1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:47 IST)

மருத்துவமனையில் சோனியா: காங்கிரஸ் தலைவராகும் ராகுல்: தேர்தலுக்காக காத்திருப்பு!!

காங்கிரஸ் தகைவர் சோனியா காந்த்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், விரைவில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவியை ஏற்பார் என தெரிகிறது.


 
 
காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
நவம்பர் மாதம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டி ராகுலை தலைவராக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும், குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தகுக்காவே காத்திருப்பதாகவும் காஸ்கிரஸ் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.   
 
ஆனாலும், குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவரது ஆதரவு தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனராம்.
 
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.