வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (10:25 IST)

முன்னாள் திமுக எம்பி வீட்டில் குண்டுவீச்சு: உட்கட்சி பூசல் காரணமா?

திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் எம்பியுமான செல்வகணபதி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசியெறிந்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தால் செல்வகணபதி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள்ல் சேதம் அடைந்தது



 
 
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் உடனே விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த காரின் தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து சேலம் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
 
சேலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக திமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாகி வருவதாகவும், செல்வகணபதி மற்றும் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள் நேற்று காலை கூட மோதிக்கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.