செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (11:23 IST)

ராகுல் காந்தி பதிவால் யுத்த களமான டுவிட்டர்

ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவுக்கு பாஜகவினர் அவரை விமர்சித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் தளம் தற்போது யுத்த களமாக மாறியுள்ளது.


 

 
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று மதியம் அவர் வளர்க்கும் நாய் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்பொது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவுடன் சேர்ந்து அவர், யார் இவருக்காக டுவிட்டரில் பதிவிடுகிறார்கள். இப்போது நான் தெளிவாக கூறுகிறேன். பிடியை விட நான் சிறந்தவன். இந்த டுவீட்டால் என்னால் என்ன செய்ய முடியும் என பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.
 
பாஜகவினர், ராகுல் காந்திக்கு பதில் யாரோ டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவரது சொந்த கருத்துகள் இல்லை என கூறி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி நேற்று டுவீட் செய்து இருந்தார். இந்த பதிவிற்கு பாஜகவினர்  அவரை விமர்சித்து வருகின்றனர்.
 
காங்கிரஸ் கட்சியினர் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் தற்போது யுத்த களமாக மாறியுள்ளது.