புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2020 (07:00 IST)

ராணுவத்தினரால் வயதான விவசாயி தாக்கப்பட்டாரா? ராகுல் காந்தியின் பகீர் குற்றச்சாட்டு!

ராணுவத்தினரால் வயதான விவசாயி தாக்கப்பட்டாரா?
தற்போது விவசாயிகள் போராட்டம் டெல்லியில் மிக வலுவாக வலுத்து வரும் நிலையில் இந்த போராட்டத்தை அடக்குவதற்காக மத்திய அரசு திடீரென ராணுவத்தை களமிறக்கியுள்ளது 
 
விவசாயிகளின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருவதன் காரணமாக அவர்களின் போராட்டத்தை சமாளிக்கவே இராணுவ ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வயதான விவசாயி சிங் என்பவரை ராணுவ அதிகாரி தாக்குகிறார் என்றும் இது மிகவும் மோசமானது என்றும் பதிவு செய்துள்ளார்
 
இதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் உண்மையில் ராணுவ அதிகாரி,  சிங்கை நோக்கி கம்பை அடிக்க ஓங்குகிறாரே தவிர அடிக்கவில்லை என்றும் தவறான குற்றச்சாட்டு என்றும் பதில் அளித்து வருகின்றனர். இது குறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது 
 
அந்த வீடியோவில் ராணுவ வீரர் அந்த முதியவரை அடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து வேண்டுமென்றே ஒரு பிரச்சனையை திசை திருப்பவே ராகுல்காந்தி இந்த பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது