செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (17:20 IST)

ஐபோன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர் – இப்போது உயிருக்கு போராட்டம்!

சீனாவில் ஐபோன் வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் தனது கிட்னியை விற்றதால் உடல்நிலை மோசமாகியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வைத்திருப்பது இன்றைய சூழலில் பல இளைஞர்களின் ஆசையாக மட்டும் இல்லாமல் கௌரவமாக உள்ளது. ஆனால் எல்லோராலும் ஐபோனை சாதாரணமாக வாங்கிவிட முடியாது. ஏனென்றால் அதன் விலை அப்படி. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசைக்காக தனது கிட்னியைக் கள்ளச்சந்தையில் விற்றுள்ளார்.

 25 வயதான இளைஞர் வாங் ஷாங்கன். வலது கிட்னியை விற்றுள்ளார். 3,273 டாலர் விலைக்கு கிட்னியை விற்று, அந்த பணத்தில் ஐபாட்-2 மற்றும் ஐபோன்-4 வாங்கியுள்ளார்.இந்நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் இதுகுறித்து விசாரித்து உண்மையை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் இது சம்மந்தமாக புகார் அளிக்க இப்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.