தடுப்பூசி, ஆக்சிஜனையும் காணவில்லை, மோடியையும் காணவில்லை: ராகுல்காந்தி
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி இல்லை, தேவையான மருந்துகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை அதேபோல் மோடியையும் காணவில்லை என முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கிண்டலடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா முதல் அலையை கையாண்டது போல் இரண்டாவது அலையை மத்திய அரசு கையாளவில்லை என குற்றச்சாட்டு பொது மக்களிடையே இருந்துவருகிறது. அதேபோல் எதிர்க்கட்சியும் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. இரண்டாவது அலையால் தினமும் ஆயிரக்கணக்கானோர் மடிந்து கொண்டிருக்கின்றனர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலங்கள் எல்லாம் ஊரடங்கு அறிவித்த நிலையில் மத்திய அரசு எந்தவித கட்டுப்பாட்டையும் அறிவிக்காமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது
இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமரும் காணாமல் போய்விட்டார். விஸ்டா பணிகள், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி ஆகியவை மட்டுமே அங்குமிங்கும் பிரதமரின் புகைப்படத்துடன் காணப்படுகின்றது என கிண்டலுடன் பதிவு செய்துள்ளார். ஆயிரக்கணக்கான கோடி செலவில் விஸ்டா என்ற பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதில் தான் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என ஏற்கனவே காங்கிரஸ் அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.