திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (15:32 IST)

கேரளாவில் அதிகமாகும் கொரோனா தொற்று… ராகுல் காந்தி கவலை!

வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான ராகுல்காந்தி கேரளாவில் அதிகமாகும் கொரோனா தொற்று குறித்து கவலைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கோரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.

இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை தொடர்ந்து விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்த அறிவிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி ‘கேரளாவில் அதிகமாகும் கொரோனா தொற்று என்னை கவலையைடையச் செய்கிறது. பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடியுங்கள் சகோதரர்களே. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ எனக் கூறியுள்ளார்.