1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:33 IST)

700 விவசாயிகளின் குடும்பங்களின் நிலை என்ன? ராகுல் கேள்வி!

விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை. 

 
இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது, விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டத்தில் உயிர்நீத்த 152 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டை பஞ்சாப் அரசு தந்துள்ளது. உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் பஞ்சாப் அரசு உறுதியளித்துள்ளது. 
 
வேளாண் சட்டங்களை அமல்படுத்தி தவறு செய்ததாக மன்னிப்புக்கோரிய பிரதமர் நிவாரணம் தரமறுப்பது ஏன்? உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தார். அதோடு டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டார்.