திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 18 ஆகஸ்ட் 2021 (18:42 IST)

சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த நர்ஸை சந்தித்த ராகுல்காந்தி!

சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த நர்ஸை சந்தித்த ராகுல்காந்தி!
சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த கேரள நர்ஸ் ஒருவரை ராகுல்காந்தி நேரில் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
காங்கிரஸ் ராகுல் காந்தி பிறந்த போது சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ராஜம்மா. இவர் டெல்லி மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த போது தான் ராகுல் காந்தி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கேரளாவுக்கு வந்துள்ள ராகுல் காந்தி தனது தாய்க்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ராஜம்மா அவர்களை சந்தித்து அவருக்கு இனிப்பு பரிசளித்து கட்டி பிடித்து முத்தமிட்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 
 
மேலும் ராகுல் காந்திக்கு அருகில் இருந்த காங்கிரஸ் தலைவர்களை பார்த்து உங்களுக்கு முன்னரே எனக்கு ராகுலை தெரியும் என்று நர்ஸ் ராஜம்மா கூறியது வேடிக்கையாக இருந்தது