1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (21:04 IST)

காங்கிரஸில் திடீர் பதவி மாற்றங்களுக்கான காரணம் என்ன?

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து கட்சி பதவிகளில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். 
 
கட்சியில் உள்ள பழைய நிர்வாகிகளுடன் இளம் தலைமுறையினரையும் உயர் பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார். அதேசமயம், மூத்த தலைவர்களையும் அரவணைத்து செல்லுகிறார். 
 
அதன்படி காங்கிரஸ் உயர்மட்ட அமைப்பான காரிய கமிட்டி எனப்படும் செயற்குழு மாற்றியமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் பொருளாளர் பதவியில், சோனியா காந்தியின் அரசியல் செயலாளரான அகமது படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
காங்கிரஸ் வட கிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர் சி.பி. ஜோஷி மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு கோவா மாநிலத்தைச் சேர்ந்த லூசினோ பெலிரோ நியமிக்கப்பட்டுள்ளார். 
 
அசாம் மாநில பொறுப்பாளராக உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வெளி விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கரண் சிங் மாற்றப்பட்டு ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 
 
மேலும், முன்னாள் சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்டவர்கள் செயற்குழுவின் நிரந்த அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு கட்சிக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. அதே இந்த மாற்றங்களும் கட்சிக்கு பலம் அளிக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.