வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (22:20 IST)

மணிசங்கர் ஐயர் சஸ்பெண்ட் ரத்து: ராகுல் காந்தி அதிரடி முடிவு

பிரதமர் மோடியை கடந்த டிசம்பர் மாதம் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர ஐயர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து கொள்வதாக அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குகுழு பரிந்துரை செய்ததால் மணிசங்கர ஐயர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த ரத்து நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சற்றுமுன் வெளியான காங்கிரஸ் கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
 
கடந்த டிசம்பர் மாதம் குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ,'பிரதமர் மோடி தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாகவும், அவர் ஒரு இழிவான மனிதர் (நீச் ஆத்மி) என்றும் கூறி இருந்ததால் காங்கிரஸ் கட்சியின் தலைமை சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.