பெட்ரோல் விலை உயர்வு; சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற ராகுல்காந்தி!
இன்று நாடாளுமன்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி சைக்கிளில் சென்றது வைரலாகியுள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் எதிர்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பெட்ரோல் விலை உயர்வு, பெகாசஸ் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்னிருத்தி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்திற்கு சென்ற ராகுல்காந்தி பெட்ரோல் விலை உயர்ந்ததை கண்டிக்கும் வகையில் சைக்கிளில் சென்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.