திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (08:03 IST)

ஹாக்கி போட்டியை நேரலையில் பார்த்து வரும் பிரதமர்: இந்திய அணிக்கு வாழ்த்து!

இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஹாக்கி போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் பார்த்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
 
சற்றுமுன் வரை இந்தியா மற்றும் பெல்ஜிய அணிகள் தலா 2 கோல்கள் போட்டு சமநிலையில் உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்த போட்டி முடிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியா பெல்ஜியம் அணி ஒலிம்பிக் ஹாக்கி போட்டியை நேரில் பார்த்து வரும் பிரதமர் மோடி இந்திய அணி வெற்றிபெற தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் 
 
இந்தியா பெல்ஜியம் ஹாக்கி போட்டியை நான் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இந்திய அணி வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் இந்திய வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் பெல்ஜியம் அணியை இந்திய அணி தோற்கடித்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது