1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (17:42 IST)

பினராயி விஜயன் - ராகுல் காந்தி கடும் வார்த்தை போர்.. இதுதான் இந்தியா கூட்டணி லட்சணமா?

கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக தாக்கி பேசி வருவதும் பதிலுக்கு பினராயி விஜயன் காங்கிரஸ் குறித்து கடுமையாக தாக்கி கடும் வார்த்தை போல் புரிவதை பார்க்கும் போது இந்தியா கூட்டமைப்பின் லட்சணம் இது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி என்ற அமைப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளது என்பது தெரிந்தது. ஆனால் கேரளாவில் மட்டும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எதிரெதிர் துருவங்களாக போட்டியிடுகிறது என்பதும், குறிப்பாக ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி பெண் வேட்பாளரை நிறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி பினராயி விஜயனை கடுமையாக தாக்கி பேசிய நிலையில் அதற்கு பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு பிற எதிர்க்கட்சி முதல்வர்களைப் போல் என்னை ஏன் கைது செய்து விசாரிக்கவில்லை என்று ராகுல் காந்தி கேட்கிறார்
 
ஆனால் உங்கள் பாட்டி இந்திரா காந்தி என்னை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தார். நாங்கள் எந்த விசாரணைக்கு அஞ்சியவர்கள் அல்ல, உங்களுக்கு பழைய பெயர் ஒன்று இருந்தது, அந்த பெயர் இன்னும் போகவில்லை என்று கூறும் படி வைத்து விடாதீர்கள்’ என்று பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran