1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (08:19 IST)

ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
கேரளாவில் 1995 ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது 
 
உத்ரா, உத்தரா, உத்தமா ஆகிய மூன்று பேருக்கு குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளில் நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது
 
ஆனால் நான்காவது பெண்ணுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வர தாமதமானது. இதனை அடுத்து மூன்று பெண்களுக்கு மட்டும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஐவரில் ஒரே ஆண் குழந்தையான உத்தராஜன், தனது சகோதரிகளுக்கு திருமண ஏற்பாடுகளை ஓடியாடி செய்து வந்தார் 
 
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிரேம்குமார், ரமாதேவி தம்பதிக்கு 1995ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. நான்கு பெண் குழந்தைகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்த நிலையில் இவர்கள் ஐவரும் கேரள மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றனர். இந்த ஐந்து பேரையும் 25 ஆண்டுகளாக அம்மாநில மக்கள் பஞ்ச ரத்தினங்கள் என செல்லமாக அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது