புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (17:35 IST)

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுள்ள ராகவா லாரன்ஸ்

4 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுள்ள ராகவா லாரன்ஸ்
கடந்த சில ஆண்டுகளாகவே ராகவா லாரன்ஸ் பல உதவிகளை ஏழை எளியோருக்கு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் கோடிக்கணக்கில் அவர் தன்னுடைய சொந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவு செய்துள்ளார் என்பதும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கும் பெரும் தொகையை நிதியாக கொடுத்து உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற பெண் ஒருவருக்கு மிகப்பெரிய உதவியை ராகவா லாரன்ஸ் செய்துள்ளார். அந்த பெண்ணின் நான்கு குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக் கொண்ட ராகவா லாரன்ஸ் கடந்த 4 ஆண்டுகளாக அவர்களுடைய கல்விச் செலவை செலவு செய்து வருகிறார் 
 
இந்த கொரோனா காலத்தில் கூட தன்னால் உதவ முடியாது என்று கூறாமல் அந்த நான்கு குழந்தைகளின் கல்வி கட்டணத்தை ராகவா லாரன்ஸ் கட்டி உள்ளதாக அந்த பெண் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது