1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (20:32 IST)

உலகக்கோப்பைக்கு பயன்படுத்திய பேருந்துகளை அன்பளிப்பாக வழங்கும் கத்தார்!

qatar
உலகக்கோப்பைக்கு பயன்படுத்திய பேருந்துகளை அன்பளிப்பாக வழங்கும் கத்தார்!
உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட பேருந்துகளை கத்தார் நாடு, லெபனான் நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
உலக கோப்பை கால்பந்து போட்டியை சமீபத்தில் கத்தார் நாடு மிகச்சிறப்பாக நடத்தியது என்பதும் அந்நாட்டிற்கு வந்த வீரர்கள் அனைவருக்கும் சிறப்பான வசதி செய்து கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கால்பந்து மைதானத்திற்கு அழைத்து செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுற்ற நிலையில் இந்த பேருந்துகளை லெபனான் நாடு கத்தார் நாடு அன்பளிப்பாக வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கத்தார் நாட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
Edited by Siva