ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்வு: சென்னை-மதுரைக்கு ரூ.4000?
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருப்பதை அடுத்து ஆம்னி பேருந்துகள் திடீரென கட்டணத்தை உயர்த்தி உள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக சென்னை சென்ற பொதுமக்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கத்தைவிட ஆம்னி பேருந்து கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்ந்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மதுரை கோயம்புத்தூர் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு பேருந்து கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து ரூபாய் 2000 முதல் 4500 வரை உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுவது
இதனால் சென்னை திரும்ப ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் கட்டணம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருப்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அரசு ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
Edited by Siva