வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (19:14 IST)

மணிப்பூரில் பள்ளி பேருந்துகள் விபத்து! 15 மாணவிகள் உயிரிழப்பு

Manipur
மணிப்பூர் மாநிலம் நோனியில்  2 பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மா நிலத்தில் உள்ள தம்பல்னு என்ற மேல் நிலைப்ப பள்ளி உள்ளது. இங்குள்ள பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக இரண்டு பள்ளி பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர்.

அங்குள்ள  நோனி என்ற மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர்- கெளபம் சாலையில், ஒரு பள்ளித்தில் கவிழ்ந்து இரு பேருந்துகள் விபத்திற்குள்ளானது.

இதுகுறித்து தகவல் தெரிவிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர்.

36 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற இப்பேருந்தில் 7 மாணவிகள் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.