வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (08:59 IST)

முதலமைச்சர் பதவிக்கு பெண் வேட்பாளர்: முழுப்பக்க விளம்பரத்தால் பரபரப்பு

முதலமைச்சர் பதவிக்கு பெண் வேட்பாளர்
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக இங்கிலாந்து நாட்டில் வாழும் இந்திய பெண் ஒருவர் முழுப்பக்க விளம்பரங்கள் செய்தித்தாள்களில் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அங்கு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க தற்போது அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக நிதிஷ்குமாரின் கட்சி, பாஜகவுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் பீகாரில் ஒரு புதிய கட்சி தோன்றிவிட்டது. இங்கிலாந்து நாட்டில் தலைநகர் லண்டனில் வாழ்ந்துவரும் பெண் புஷ்பம் பிரியா சவுத்ரி என்பவர் இந்த கட்சியை தொடங்கி உள்ளார். இவர் பிகார் மாநிலத்தின் முன்னாள் எம்எல்சி ஆக இருந்த வினோத் சவுதரி என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
புஷ்பம் பிரியா சவுத்ரி தன்னை பீகார் மாநில முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதுகுறித்த முழுப்பக்க விளம்பரங்கள் பீகார் மாநிலத்தில் உள்ள முன்னணி செய்தித்தாள்களில் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிகார் மாநிலத்தில் ஊழலை முற்றிலும் ஒழிக்க கட்சி ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இவரது கட்சி பீகார் மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்