செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (17:43 IST)

பஞ்சாப் சட்டமன்றக் கூட்டம் செல்லும்: ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Bhagwant Mann -Bhagat Singh
தனது ஒப்புதலின்றி நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற கூட்டம் செல்லாது என அம்மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித்  கூறியதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர்  தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில் ஆளுனராக பவாரிலால் புரொஹித் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பஞ்சாப் ஆளுனருக்கு எதிராக பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில்,   மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும் என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ''நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது.  இதே நிலை தொடர்ந்தால் நாடாளுமன்றக் கொள்கை அடிப்படையில்    ஜனநாயகம் சாத்தியமா ?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,   தனது ஒப்புதலின்றி நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற கூட்டம் செல்லாது என அம்மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித்  கூறியதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளதாவது:

’’ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலின்றி கடந்த ஜுன் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற  பஞ்சாப் சட்டமன்றக் கூட்டம் செல்லும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களும் செல்லும்., சட்டப்பேரவை கூட்டம் நடந்தது செல்லுமா என கேள்வி எழுப்பியதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை

ஆனால், சட்டப்பேரவை கூட்டத்தை தேதி குறிப்பிட்டாமல் ஒத்திவைக்க சபாநாயகருக்கு அரசியலமைப்புச் சட்டம்  அதிகாரம்  வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.