புனேவில் கடத்தப்பட்ட 868 கிலோ கஞ்சா! – கைது செய்த அதிகாரிகள்!
மகாராஷ்டிராவில் பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி சென்ற கும்பலை சுங்க அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் புனே பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை கும்பல் ஒன்று கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கன ரக வாகனங்கள் இரண்டை மடக்கி பிடித்தனர்.
அதை சோதனை செய்ததில் அதில் 868 கிலோ கஞ்சா இருந்துள்ளது, இதன் மதிப்பு 1.04 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 75 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ ’சாரஸ்’ என்ற போதை மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்ததோடு அதை கடத்தி சென்றவர்களையும் கைது செய்துள்ளனர்.