மோடியின் அமெரிக்க பயணத்தில் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை: RTI பதில்..!
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என தகவல் உரிமைச் சட்டம் பதில் அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்டின் அழைப்பின் பெயரில் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது, இந்தியாவில் கல்வி வளாகங்களை தொடங்க அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பு நட்பு மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. உயர் கல்வியில் ஒத்துழைப்பை வழங்கப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்க அதிபருடன் நடந்த சந்திப்பு சிறப்பாக அமைந்ததாகவும், இரு நாடுகளுக்கிடையே நட்புறவை வலுப்படுத்த இந்த பேச்சுவார்த்தை குறிப்பிடத்தக்கதாக அமைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையே எந்தவித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவில்லை என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran