ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (17:04 IST)

காவல்துறையில் ''ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை-'' பிரதமர் மோடி பரிந்துரை

Pm Modi
ஹரியானா மாநிலத்தில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஒரே காவல்துறை சீருடை என்னும் யோசனை சாத்தியமா என்று அனைத்து   மாநிலங்களும் ஆலோசனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவை  நாட்டில் பல்வேறு முக்கிய  திட்டங்களை அறிவித்து வருகின்றன.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்கள் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஹரியானா மா நிலம் சூரஜ்கண்டில் நடந்த  மாநில உள்துறை அமைச்சர்கள் 2 வது நாள் மாட்டில், காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி,  சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மா நில அரசுகளின் பொறுப்பு என்று கூறினார்.

மேலும்.  ஒரே  நாடு ஒரே ரேசன், ஒரே  ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கட்டம் ஆகிய திட்டங்களுக்குப் பிறகு, இந்த மா நாட்டில், யூனியன் பிரதேசங்களுக்கு ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.