செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (14:26 IST)

வெயிலும் கொளுத்தும்.. மழையும் உண்டு.. ஜூன் 20 வரை வானிலை அறிவிப்பு..!

தமிழகத்தில் ஜூன் இருபதாம் தேதி வரை வெயிலும் கொளுத்தும் அவ்வப்போது மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஜூன் 20ஆம் தேதி வரை லேசான மழை பெய்யும் என்று அதே நேரத்தில் ஜூன் 18ஆம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தென்னிந்திய பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி மாரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்கள் காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் ஜூன் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் ஜூன் 18ஆம் தேதி வரை இயல்பை விட அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran