புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (22:05 IST)

வெகு சில கோடீஸ்வரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தார் பிரதமர் மோடி- ராகுல் காந்தி

Ragul Gandhi
உலகில் மிகப்பெரிய ஜனநாயக   நாடான இந்தியாவில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
 
18வது மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை  உருவாக்கி, வரும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
 
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, வரும் மக்களவை தேர்தலில் கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபத்தில் வேட்புமனுதாக்கல் செய்தார்.
 
தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், சமானிய மக்களுக்காக அரசு கஜானாவை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
’’வெகு சில கோடீஸ்வரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தார் பிரதமர் மோடி. இந்த தொகையை வைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 24 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தி இருக்கலாம்,  காங்கிரஸின் திட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வரும் எனக் கேட்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது.  நண்பர்களுக்கு பாசம் காட்டியது போதும். சாமானிய மக்களுக்காக அரசு கஜானாவை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.