1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை! ரூ.53,000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தங்கம் விலை உச்சத்திற்கு சென்றது என்பதும் குறிப்பாக ஒரு சவரன் 52 ஆயிரத்துக்கும் அதிகமாக சென்றது என்பதை ஏன் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தங்கம் விலை இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.53,000ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6,660 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 அதிகரித்து   ரூபாய் 53,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7130 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 88.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 85000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கவிதாவுக்கு ஜாமின் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு.. நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!