திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (18:53 IST)

மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரையா? பரபரப்பு தகவல்!

மேற்குவங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றபோது அவரது வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலை அடுத்து பாஜகவினர் மற்றும் மம்தா பானர்ஜியின் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வருகிறது 
 
இந்த நிலையில் இந்த இந்த சம்பவம் குறித்து அறிக்கை தருமாறு உள்துறை அமைச்சகம், மேற்குவங்க கவர்னரிடம் கேட்டு இருப்பதாகவும், மேற்கு வங்க கவர்னர், அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதால் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
அடுத்த ஆண்டு தமிழகத்தை போலவே மேற்குவங்க மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கிளம்பி வரும் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது