புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:32 IST)

”இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்ததற்கு நன்றி”.. பிரஷாந்த் கிஷோர் டிவிட்

பிரஷாந்த் கிஷோர்

இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லி மக்களுக்கு நன்றி என பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை உத்திகளை வகுத்து தரும் பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரஷாந்த் கிஷோர் பரப்புரை உத்திகளை வகுத்து தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.