புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஜனவரி 2019 (11:06 IST)

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் : பிரகாஷ்ராஜ் டுவிட்

சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். அவ்வப்போது டுவிட்டரில் பிரதமருக்கு எதிரகாகக் கருத்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இன்றைய புத்தாண்டு தினத்தில் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது :
 
'ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...ஒரு புதிய வருடத்தின் தொடக்கம். பொறுப்பும் அதிகரித்திருக்கிறது... உங்களது ஆதரவில் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட உள்ளேன். தொகுதி  குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். 'இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
சினிமாவில் ஜொலித்தவர் பிரகாஷ்ராஜ் அரசியல் களத்தில் ஜொலிப்பாரா என்பது மக்களின் கையில்தான் உள்ளது.